27.6.07

மலையாளம்- அழகிய மொழி


தமிழைப் போன்று மிகவும் இனிமையான மொழி மலையாளம். அந்த மொழியை யார் பேசினாலும் அதை மிகவும் ரசித்துக் கேட்பேன்.

நான் மிகவும் ஆசைப்பட்டு கற்றுக் கொண்ட மொழி மலையாளம்.

சமஸ்கிருதத்தின் ஸ்வாரஸ்யம்.......

தமிழின் அழகு.......

மலையாளத்திற்கென்றே உள்ள சில சிறப்பம்சங்கள்......

இவற்றின் சரியான கலவை....... மலையாளம்.

மலையாளத்துடனான என் ப்ரியம் 10 வருடங்கள்.... இன்னும் ஒரு துளி கூட ஆர்வம் குறையவில்லை. நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது.

'ழ' - தமிழ் மற்றும் மலையாளத்தில் மாத்திரம் உள்ள எழுத்து. அது தமிழற்களை விட மலையாளிகளால் மிக அழகாக உச்சரிக்கப்படுகிறது.
தமிழில் நாம் கேட்கின்ற அதே வார்த்தைகள் இன்னும் ஸ்வாரஸ்யமாக.... அழகாக மலையாளத்தில் உச்சரிக்கப்படும்.

நண்பர்களே.... தமிழின் அழகை இன்னொறு கோணத்தில் ரசிக்க ஆசை உண்டா உங்களுக்கு?? அதற்கு சரியான வழி.... மலையாளம் தான்......

18.6.07

எஸ்.ராம கிருஷ்ணன் - எனக்குப் பிடித்த எழுத்தாளர்


தமிழில் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் ஏராளமானோர் உண்டு. அவர்களுள் தனித்தன்மை வாய்ந்த எழுத்தாளர் - எஸ்.ராம கிருஷ்ணன்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆனந்த விகடனில் மட்டுமே அவரின் எழுத்தை வாசித்து இருக்கிறேன். அதிலேயே அவரின் ரசிகன் ஆகிவிட்டேன்.

அவர் வார்ததைகளில் வர்ணஜாலம் புரிவதில்லை. பரபரப்பாக எழுதுவதில்லை. அப்படியெனில் வேறென்ன இருக்கிறது அவரிடம்?

இயல்பான விவரிப்பு.... யதார்ததம்..... அவரின் எழுத்துடனே பயணிக்க வைக்கும் லாவகம்.... என சொல்லிக்கொண்டு போகலாம்.

அதிலும் குறிப்பாக அவர் பயணங்களில் ஆர்வம் நிறைந்தவர். அந்த பயணங்களில் நடந்த அனுபவங்களை விவரிப்பதில் அவருக்கு நிகர் அவரே.

மனித உணர்வுகளையும் யதார்த்தமாய் எழுதுவது இவர் சிறப்பு.

இவரின் 'துணையெழுத்து' , 'தேசாந்திரி', 'கதாவிலாசம்' அருமையான நூல்கள். இப்போது இவர் விகடனில் எழுதும் 'கேள்விக்குறி' யும் சிறப்பான தொடர்.

இவரின் மற்ற 'உப பாண்டவம்', 'நெடுங்குருதி' முதலான நூல்களையும் படிக்க காத்திருக்கிறேன்.

இவரின் இணைய முகவரி... http://www.sramakrishnan.com/

14.6.07

ரஜினி ரசிகர்களே.....


வெள்ளியன்று சிவாஜி படம் வெளியாகிறது. அதைப் பற்றித்தான் எவ்வளவு சுவாரசியமான தகவல்கள்.... எத்தனை வதந்திகள்..... எல்லாம் ரஜினியை சுற்றியே... ரஜினிக்கு 15 கோடி சம்பளம்... ஏவி.எம்மிற்கு 20 கோடி லாபம்... திரையரங்கு அதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்... இசைத்தட்டு விற்பனையில் சாதனை... இப்படி எல்லாருக்கும் லாபம். ஆனால் ரசிகர்களுக்கு????? நூறு ருபாயிலிருந்து ஆயிரம் வரை நஷ்டம் தான்.

இரவு 9 மணியளவில் திரையரங்கு பக்கம் சென்றேன். ஒரே திருவிழா கோலம். வினைல் போர்டுகள் சுற்றியும் உள்ளன.அப்போது எனக்கு தோன்றியது என்னவென்றால்... இத்தனை செலவு எதற்கு செய்ய வேண்டும்? இதனால் அவர்களுக்கு என்ன லாபம்? படம் பார்த்த சந்தோஷம் மட்டும் மிச்சம்....

ஆனால் இன்னொறு கோணத்திலும் யோசித்தேன். தமிழற்களுக்கு... ஏன் இந்தியர்களுக்கு ஒருவரை மிகவும் பிடித்து விட்டால் அவர்களை உச்சியில் வைத்து கொண்டாடுவார்கள். க்ரிக்கெட், சினிமா, டி.வி, அரசியல், விளையாட்டு, எழுத்து என எதில் இருந்தாலும் கொண்டாடுவார்கள். ஒரே விசயம்... அந்த நபர் மக்களை கவர வேண்டும்.ரஜினியை பற்றி நான் என்ன சொல்ல... அவரைப் போன்று மக்களை கவர்ந்த சமகால நடிகர் வேறு யாரும் இல்லை.

இந்த கொண்டாட்டங்களை இதோடு ரசிகர்கள் நிறுத்தினால் பரவாயில்லை. பாலாபிஷேகம்... கலாட்டா, அடிதடி, வெறி, கொலை இவை இல்லாத தினமாக ரிலீஸ் தினம் இருக்க வேண்டும்.யாரோ சம்பாதிக்க நாம் ஏன் முட்டி மோதிக்கொள்ள வேண்டும். ரஜினி ரசிகர்களே!!! உங்கள் தலைவர் படத்தை ரசியுங்கள்.ஆர்ப்பரியுங்கள். கொண்டாடுங்கள்.ஆனால் வேறு ஒன்றும் வேண்டாமே....

6.6.07

WORLD ENVIRONMENTAL DAY.......


yesterday ... it is world environmental day (WED), which create awareness of the environment to the people and enhance the political attention and action.

----------------------------
for this 2007 WED slogan is
melting ice- a hot topic?
this slogan focuses on the effects that climate change is having on polar ecosystems and communities and the resulting consequences
around the world.

----------------------------

do u know... when did this WED begin?


It was established by the United Nations General Assembly in 1972 to mark the opening of the Stockholm Conference on the Human Environment.

-----------------------------------------------------------------------------

The important environmental issues are.... global warming, different types of pollution, solid wastes, plastics, population growth.


-----------------------------------------------------------------------------

What is your resolution for this world environmental day????

-----------------------------------------------------------------------------


Slogan for the previous years are:

2006 - Deserts and Desertification - Don't Desert Drylands!
2005 - Green Cities – Plan for the Planet!
2004 - Wanted! Seas and Oceans – Dead or Alive?
2003 - Water – Two Billion People are Dying for It!
2002 - Give Earth a Chance
2001 - Connect with the World Wide Web of Life
2000 - The Environment Millennium - Time to Act
1999 - Our Earth - Our Future - Just Save It!
1998 - For Life on Earth - Save Our Seas
1997 - For Life on Earth
1996 - Our Earth, Our Habitat, Our Home
1995 - We the Peoples: United for the Global Environment
1994 - One Earth One Family
1993 - Poverty and the Environment - Breaking the Vicious Circle
1992 - Only One Earth, Care and Share
1991 - Climate Change. Need for Global Partnership
1990 - Children and the Environment
1989 - Global Warming; Global Warning
1988 - When People Put the Environment First, Development Will Last
1987 - Environment and Shelter: More Than A Roof
1986 - A Tree for Peace
1985 - Youth: Population and the Environment
1984 - Desertification
1983 - Managing and Disposing Hazardous Waste: Acid Rain and Energy
1982 - Ten Years After Stockholm (Renewal of Environmental Concerns)
1981 - Ground Water; Toxic Chemicals in Human Food Chains
1980 - A New Challenge for the New Decade: Development Without Destruction
1979 - Only One Future for Our Children - Development Without Destruction
1978 - Development Without Destruction
1977 - Ozone Layer Environmental Concern; Lands Loss and Soil Degradation
1976 - Water: Vital Resource for Life
1975 - Human Settlements
1974 - Only one Earth


2.6.07

Language is my passion

"You live a new life for every new language you speak.If you know only one language, you live only once." - Czech proverb



I love languages. I wonder the letters & sounds of languages.I want to learn all Indian languages. It's my ambition.



At present, I know Tamil, English, Malayalam very well (I think so). And also I can able to read and write the following languages.... Kannada, Telugu, Hindi, Urdu, Arabic, German.