30.7.07

வட்டார வழக்கு ஒரு மொழிக்கு அவசியமா?




மொழி - மனிதன் படைத்த அற்புதமானவைகளில் ஒன்று.

மொழிகள் மட்டும் இல்லையென்றால் வாழ்க்கையில் ஸ்வாரஸ்யம் என்ற ஒன்று இல்லாமல் போயிருக்கும்.

வாழ்க்கையை அழகுபடுத்துவது மொழி என்பது என் தாழ்மையான கருத்து.

மொழியை இலக்கண சுத்தமாக பேசுவது சரியா? இல்லை எப்படி வேண்டுமென்றாலும் பேசலாமா? அதாவது வட்டார வழக்கில் பேசுவது சரியா?

இதற்கு ஏராளமான கருத்துபேதங்கள் உண்டு.

* மொழியை இலக்கண சுத்தமாக பேசும்போது தான் அதன் மதிப்பு உயர்கிறது என்பது ஒரு சாரார் கருத்து.

* மொழி என்பது ஒரு தொடர்பு சாதனம் மட்டுமே. அதை எப்படி பேசினால் என்ன? மற்றவர்க்கு புரிந்தால் சரி என்பது இன்னொரு சாராரின் கருத்து.

என்னுடைய கருத்து என்ன தெரியுமா?

மொழி வெறும் தொடர்பு சாதனம் மட்டும் அல்ல. அது ஆன்மா... ஜீவன்... வாழ்க்கை. ஆன்மா இல்லையென்றால் எப்படி வாழ முடியாதோ அப்படியே மொழியும் இன்றி இந்த உலகம் இயங்காது.

வட்டார மொழி என்பது வண்ணங்கள் போன்றது. எராளமான வர்ணங்கள் இருந்தால்தான் இந்த உலகை ரசிக்க முடியும். வெறும் கருப்போ, வெள்ளையோ, பச்சையோ இருந்தால் எப்படி இருக்கும்? கற்பனை செய்து பாருங்கள். நன்றாக இருக்குமா என்ன? எல்லாம் இருந்தால் தான் ஸ்வாரஸ்யமே.

வட்டார வழக்கு எந்த மொழிக்கு அதிகமாக இருக்கிறதோ அதுவே சிறந்த மொழி என்பது என் கருத்து. தமிழில் தான் எத்தனை வட்டார வழக்குகள். அதனால்தான் அது இன்றும் உலக மொழிகளில் உயர்ந்து நிற்கிறது. வட்டார வழக்கு இல்லாத மொழி நிலைத்து நின்றது இல்லை. அதற்கு உதாரணம்... சமஸ்கிருதம்.


நண்பர்களே... உங்கள் வட்டார வழக்கில் பேச வெட்கப்படாதீர்கள். அதுதான் அழகு. அதுதான் ஜீவன். அதுதான் உங்கள் தனித்தன்மை.... அதை இழந்து விடாதீர்கள்....

1 comment:

mspseudoneem said...

Though the post is about slangs, it touches upon the philosophy of life itself!!