24.9.08

என் வேளாங்கண்ணி பயணம்....








சில பயணங்கள் வாழ்க்கையில் மறக்க இயலாது. என் வேளாங்கண்ணி பயணமும் எப்போதும் ஓர்மையில் இருக்கும்.


இதற்கு முன் பல முறை அங்கே சென்றிருந்தாலும் இது புதிய அனுபவம்.


காரணம்.... 1. பெற்றோருடன் செல்லாமல் நண்பருடன் சென்றது....


காரணம்.... 2. வேளாங்கண்ணி திருவிழாவிற்கு செல்வது இதுவே முதல் முறை...


காரணம்.... 3. அறை எடுக்காமல் கடற்கரையில் படுத்துறங்கியது.....


காலை 5.45 ரயிலைப் பிடித்தோம், நானும் என் நண்பர் ரிச்சர்டும். சரியாக 9.15 க்கு திருத்துறை பூண்டியை அடைந்தோம். அங்கே ஒரு சுமாரான உணவகத்தில் சிற்றுண்டி கழித்தோம். அவ்வளவு நன்றாக இல்லை. அதன் பின் வேளாங்கண்ணிக்கு பேருந்து பிடித்தோம். நல்ல கூட்டம். நல்ல வேலை எனக்கு இடம் கிடைத்தது.


மோசமான வழித்தடம். பத்து வருடத்திற்கு முன்பு பார்த்த அதே வசதிகள் தான் இப்போதும். ஒரு வழியாக திருத்தலத்தை அடைந்தோம்.


இங்கே ஒரு சின்ன அறிமுகம்.... வேளாங்கண்ணி ஒரு பேராலயம் அதாவது basilica. இது போர்த்துகிசியர்களால் கட்டப்பட்டு பின்னர் பலரின் உழைப்பால் பேராலயம் ஆனது. இந்த திருவிழா இந்தியா முழுவதும் விஷேசமான ஒன்று. தமிழர் மட்டும் அல்லாது மலையாளிகள், தெலுங்கர், கன்னடிகர், கொங்கனிகள், சிங்களர்கள் என பலரும் கலந்து கொள்ளும் பெருவிழா.


அறிமுகம் போதும். இப்ப எங்களின் அனுபவங்கள்.
நல்ல வெயில் கொளுத்தி எடுத்தது. வியர்வை மழையில் நனைந்தபடி நடக்க ஆரம்பித்தோம். உள்ளே சென்று மெழுகு வாங்கினோம். ஆலயத்தில் சென்று மெழுகு ஏற்றி வேண்டினோம். பின்னர் கொடியேற்றும் வைபவத்தை காண சென்றோம். அந்த இடத்தை சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள். முதலில் பல்வேறு உலக மொழிகளில் ஜெபம் செய்தனர். பின்னர் இசை முழங்க மெல்ல கொடி ஏற்றினர். பார்க்க அவ்வளவு அழகு. அந்த நிமிடத்தில் மாபெரும் அமைதி.


அது முடிந்த பின் திருப்பலியில் கலந்து கொண்டோம்.


பின்னர் கேன்டின் சென்று மதிய உணவு சாப்பிட்டோம். பின்னர் அருங்காட்சியகம் சென்று பார்வையிட்டோம். அப்போது ஒரு கன்னட பெண் வந்தாள். எல்லாரும் அவளையே பார்த்தனர். என்னவென்று பார்த்த போது, அவளின் உள்ளாடை வெளியே தெரிய மிகக் கவர்ச்சியாக உடை அணிந்து இருந்தாள். அதை பார்த்து நொந்தபடி வெளியே வந்தோம். ஒரு புனித இடத்திற்கு வரும்போது இப்படியா உடை அணிவது? என்ற கேள்வியுடன் பழைய ஆலயம் சென்றோம். வழியில் பல்வேறு மக்கள் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். மீன் வாசம் மூக்கை துளைத்தது.

நமது தமிழர்கள் எப்போதும் இப்படிதான். பெரிய பெரிய மூட்டை முடிச்சுகளுடன் தான் எங்கும் பயணிக்கிறார்கள். இங்கும் அப்படிதான். குடும்பத்துடன் வருகிறார்கள். நன்றாக சமைத்து சாப்பிடுகிறார்கள். அப்படியே திருவிழா கொண்டாடி விட்டு ஊருக்கு புறப்படுகின்றனர்.











சரி... நம்ம விஷயத்திற்கு வருவோம். பழைய ஆலயம் சென்று நன்றாக வணங்கி விட்டு மற்ற இடங்களையும் பார்த்தோம். வரும் வழியில் நிறைய பேர் முட்டி போட்டபடி நடந்து வந்து கொண்டிருந்தனர். கொடுமை! பைபிளில் எந்த பக்கத்திலும் இது போல தங்களை கொடுமை படுத்திக்கொள்ள சொல்லவில்லை. அது போல் தான் தேங்காய் பழம் எடுத்து போவது, தங்களை பல விதங்களில் வருத்தி கடவுளிடம் வேண்டுவது.... சுத்த பேத்தல்.... இவர்கள் கிறிஸ்தவர்களா? இல்லை இந்துக்களா? என வியப்புதான் ஏற்பட்டது.





பின்னர் கடற்கரை சென்றோம். இரண்டு மணி நேரம் நன்றாக வேடிக்கை பார்த்தோம். ரிச்சர்ட் கடலில் குளித்தார். நான் குளிக்கவில்லை. சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் கடலின் மீது தான் எத்தனை ஆசை... அதை ரசித்த படியே இருந்தேன். ஒரு அழகான பெண். முதலில் கடலில் இறங்க மிகவும் பயப்பட்டாள். பின்னர் மெல்ல காலை மட்டும் நனைத்தாள். கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இறங்கினாள். பின்னர் ஒரே கொண்டாட்டம் தான். பார்க்க அவ்வளவு அழகு. ஒரு சிறிய குழந்தையின் குறுகுறுப்பு... ஒரு வயதான பெண்ணின் கொண்டாட்டம்... கணவன் மனைவியின் அந்யோனியம். அடடா எல்லாவற்றையும் காண கண் கோடி வேண்டும்.

இரவில் தேர் பவனியை கண்டோம். ஒவ்வொரு தேரும் அழகு. அதைத் தூக்கிவர கோவா ஆண்கள் பெண்களுக்குத்தான் அவ்வளவு ஆசை. தமிழர்களுக்கு அவ்வளவு ஆசை இல்லை. தேர் வேளாங்கண்ணியின் வீதிகளை சுற்றியது. நானும் ரிச்சர்டும் பவனியில் பங்கேற்றோம். ஒவ்வொரு மொழியினரும் அவரவர் மொழியில் பாடியபடி வந்தது இன்னும் அழகு.

இரவு சாப்பிட்டு முடித்ததும் கொஞ்ச நேரம் பாட்டுக் கச்சேரி கேட்டோம். பின்னர் கடற்கரை சென்று ஒரு படகில் படுதுறங்கினோம். வான் நட்சத்திரங்களை ரசித்தபடி உறங்கி போனோம். திடீர் என்று மழை தூறல். மணி மூன்று. எழுந்து ஓடினோம். அங்கேயும் இங்கேயும் என சில பல பகுதிகளில் படுத்து உறங்கினோம். நல்ல தூக்கம் இல்லை என்றாலும் இது ஒரு வித்யாச அனுபவம். விடிந்ததும் ஒரு கடை சென்று தேநீர் அருந்தி பேருந்து நிலையம் சென்றோம். ஒரு மணி நேர காத்திருப்புக்கு பின் பேருந்து கிடைக்க காரைக்குடி புறப்பட்டோம், வேளாங்கண்ணி அனுபவங்களை அசைபோட்டபடி.....

என் புதிய கவிதை...


பாவம் செய்தேன்.....

கடவுளிடம் வேண்டினேன்.....

மன்னித்தார்....

மீண்டும் பாவம் செய்தேன்.... 

8.9.08

onam - kerala festival






ഇത് എന്റെ ആത്യത്തെ മലയാളം എഴുത്ത്. ഈ പ്രാവശ്യം ഞാന്‍ ഓണം കുറിച്ച് എഴുതാന്‍ പോകുന്നു.

ഈ വര്ഷം സെപ്റ്റംബര്‍ 12 ആണ് ഓണം. ഇത് ഹിന്ദുക്കള്‍ ആഘോഷിക്കുന്ന ഒരു ഫെസ്റിവല്‍ ആണ്.
എന്നാലും ക്രിസ്ടിയന്സും മുസ്ലിംകളും ആഘോഷിക്കുന്ന ഒരു വിശേഷം ആണ്.

ഈ ഓണം ചിങ്ങ മാസതില്ലാണ് വരും. മഹാബലി ഈ നാളില്‍ കേരളത്തില്‍ വന്നു എല്ലാ മലയാളികളയും ആസംശിക്കും എന്നാണു മലയാളികളിന്‍ വിശ്വാസം.

ഓണക്കാലത്ത് 'പൂകളം' ഇടും. ആ പൂകളം കാണാന്‍ അത്രേ പങ്ങിയായിട്ടു ഇരിക്കും.

ഓണ സത്യ ഇത് ഓണത്തിന്ടെ ഇന്നൊരു സ്പെഷ്യല്‍. ഈ സത്യയില്‍ ..... സാതം, എരിശ്ശേരി, പുളിശ്ശേരി, ഓലന്‍, അവിയല്‍, തോരന്‍, മുലകൊസ്യം, കൂടുകാരി, സാമ്പാര്‍, രസം, പായസം, പ്രഥമന്‍, ഉപ്പേരി, അച്ചാര്‍, പപ്പടം, പഴങ്ങള്‍ എല്ലാം ഉണ്ടായിരിക്കും.

വള്ളംകളി നല്ലൊരു ബോട്ട് രാസ് ആണ്. ഇത് ഓണം സമയം നടക്കുന്ന ഒരു അടിപൊളി കളി ആണ്.
കൈകൊട്ടികളി ഈ ഓണ സമയം ആടുന്ന ഒരു ആട്ടം ആണ്. ക്കാണാന്‍ നല്ല പന്കിയായിരിക്കും.