3.3.08

எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி......

நான் முதன் முதலாக வாசித்த நாவல் 'கனவு தொழிற்சாலை'. சுஜாதாவின் நாவல். இவரின் எழுத்தை வாசித்து தொடங்கியதாலோ என்னவோ அதன் பிறகு ஏராளமான நாவல்களை வாசிக்க ஆரம்பித்தேன்.

அவரின் தீவிர ரசிகன் நான். காரணம் அவரின் எளிய மொழிநடை.அவரை நவீன புதின உலகின் பிதா மகன் என்றே சொல்லலாம். கடினமான விசயங்களை எளிமையான நடையில் எழுதும் லாவகம்.... புது புது எழுத்து யுக்திகளை கையாளும் திறமை.... பாத்திரங்களை பயன்படுத்தும் விதம்.... என அவரின் திறமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அறிவியலை அழகு தமிழில் அறிமுகப்படுத்தியவர்....

கனிணியை கன்னித்தமிழில் புரியவைத்தவர்.....

சினெமாவிலும் சாதித்தவர்.....

கவிதைகளைப் பற்றி ஒரு புரிதலை எனக்குத் தந்தவர்....

தனது முதுமையைக் கூட ரசித்து வாழ்ந்தவர்....

இவரின் வாழ்த்துக்களால் புகழ் பெற்ற கவிஞர்கள் எராளமானோர்.... மனுஷ்யபுத்திரன், கனிமொழி அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்....

'ரோபோ' படம் அவரின் வசனம் இல்லாமல் கொஞ்சம் தடுமாறவே செய்யும்....

அவருக்கு என் இதயாஞ்சலி......