14.6.07

ரஜினி ரசிகர்களே.....


வெள்ளியன்று சிவாஜி படம் வெளியாகிறது. அதைப் பற்றித்தான் எவ்வளவு சுவாரசியமான தகவல்கள்.... எத்தனை வதந்திகள்..... எல்லாம் ரஜினியை சுற்றியே... ரஜினிக்கு 15 கோடி சம்பளம்... ஏவி.எம்மிற்கு 20 கோடி லாபம்... திரையரங்கு அதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்... இசைத்தட்டு விற்பனையில் சாதனை... இப்படி எல்லாருக்கும் லாபம். ஆனால் ரசிகர்களுக்கு????? நூறு ருபாயிலிருந்து ஆயிரம் வரை நஷ்டம் தான்.

இரவு 9 மணியளவில் திரையரங்கு பக்கம் சென்றேன். ஒரே திருவிழா கோலம். வினைல் போர்டுகள் சுற்றியும் உள்ளன.அப்போது எனக்கு தோன்றியது என்னவென்றால்... இத்தனை செலவு எதற்கு செய்ய வேண்டும்? இதனால் அவர்களுக்கு என்ன லாபம்? படம் பார்த்த சந்தோஷம் மட்டும் மிச்சம்....

ஆனால் இன்னொறு கோணத்திலும் யோசித்தேன். தமிழற்களுக்கு... ஏன் இந்தியர்களுக்கு ஒருவரை மிகவும் பிடித்து விட்டால் அவர்களை உச்சியில் வைத்து கொண்டாடுவார்கள். க்ரிக்கெட், சினிமா, டி.வி, அரசியல், விளையாட்டு, எழுத்து என எதில் இருந்தாலும் கொண்டாடுவார்கள். ஒரே விசயம்... அந்த நபர் மக்களை கவர வேண்டும்.ரஜினியை பற்றி நான் என்ன சொல்ல... அவரைப் போன்று மக்களை கவர்ந்த சமகால நடிகர் வேறு யாரும் இல்லை.

இந்த கொண்டாட்டங்களை இதோடு ரசிகர்கள் நிறுத்தினால் பரவாயில்லை. பாலாபிஷேகம்... கலாட்டா, அடிதடி, வெறி, கொலை இவை இல்லாத தினமாக ரிலீஸ் தினம் இருக்க வேண்டும்.யாரோ சம்பாதிக்க நாம் ஏன் முட்டி மோதிக்கொள்ள வேண்டும். ரஜினி ரசிகர்களே!!! உங்கள் தலைவர் படத்தை ரசியுங்கள்.ஆர்ப்பரியுங்கள். கொண்டாடுங்கள்.ஆனால் வேறு ஒன்றும் வேண்டாமே....

No comments: