18.6.07

எஸ்.ராம கிருஷ்ணன் - எனக்குப் பிடித்த எழுத்தாளர்


தமிழில் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் ஏராளமானோர் உண்டு. அவர்களுள் தனித்தன்மை வாய்ந்த எழுத்தாளர் - எஸ்.ராம கிருஷ்ணன்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆனந்த விகடனில் மட்டுமே அவரின் எழுத்தை வாசித்து இருக்கிறேன். அதிலேயே அவரின் ரசிகன் ஆகிவிட்டேன்.

அவர் வார்ததைகளில் வர்ணஜாலம் புரிவதில்லை. பரபரப்பாக எழுதுவதில்லை. அப்படியெனில் வேறென்ன இருக்கிறது அவரிடம்?

இயல்பான விவரிப்பு.... யதார்ததம்..... அவரின் எழுத்துடனே பயணிக்க வைக்கும் லாவகம்.... என சொல்லிக்கொண்டு போகலாம்.

அதிலும் குறிப்பாக அவர் பயணங்களில் ஆர்வம் நிறைந்தவர். அந்த பயணங்களில் நடந்த அனுபவங்களை விவரிப்பதில் அவருக்கு நிகர் அவரே.

மனித உணர்வுகளையும் யதார்த்தமாய் எழுதுவது இவர் சிறப்பு.

இவரின் 'துணையெழுத்து' , 'தேசாந்திரி', 'கதாவிலாசம்' அருமையான நூல்கள். இப்போது இவர் விகடனில் எழுதும் 'கேள்விக்குறி' யும் சிறப்பான தொடர்.

இவரின் மற்ற 'உப பாண்டவம்', 'நெடுங்குருதி' முதலான நூல்களையும் படிக்க காத்திருக்கிறேன்.

இவரின் இணைய முகவரி... http://www.sramakrishnan.com/

No comments: